செவ்வாய், 3 ஜனவரி, 2012

எங்கள் இந்திய தேசம்


எங்கள் இந்திய தேசம்

நித்யஸ்ரீ, சென்னை
முப்பக்கமும் கடலால் சூழ்ந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
ஒரு பக்கம் மட்டும் தீவாய் நிறைந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பார் எங்கிலும் பசுமையாய்
பயிர்கள் விளைந்திருக்கும்!
எங்கள் இந்திய தேசம்!
அந்த பசுமையிலே எங்கள்
பாரத மக்களின் பசி போக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு என்று
அன்றே பாடினான் எங்கள் கவி பாரதி!
எம்மதமும் சம்மதமே?
என்று மத சார்பற்று வாழும்
எங்கள் இந்திய தேசம்!
வேற்று தாய் மக்களும்கூட
ஒரு தாய் பிள்ளை போல்
சகோதர உணர்வுகளுடன்
வாழ்ந்திடும் எங்கள் இந்திய தேசம்!
பெண்களை கண்களாய்
போற்றிடும் எங்கள் இந்திய தேசம்!
அயலவர் எல்லாம் கண்டு
சிறப்பு கொள்ளும்
எங்கள் இந்திய தேசம்!
இந்த புனித பூமியில்
நான் ஒரு இந்திய குடிமகன்
என்று பெருமையோடு சொல்லி கொள்வேன்!

தாயெனும்...kavithai


தாயெனும்...

பா மதியழகன்
பிறந்தவுடன்
தொப்புள் கொடி அறுந்தது
நடக்கப் பழகியவுடன்
கைப்பிடியும் தளர்ந்தது
மீசை அரும்பத் தொடங்கியவுடன்
எந்த விவகாரத்திலும்
அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற
அச்சமே அவள் மனதில்
வியாபித்திருந்தது
பட்டம் பெற்றவுடன்
பறக்கப்பழகிய குஞ்சுகளை
இரையை தேடிக்கொள்ளச் செய்ய
தாய்ப்பறவை
தனது அலகால் கொத்தித் துரத்துமே
அதுவும் அவள் வாய்வழியே
வெளிப்படுத்திய வார்த்தைகளால் நிகழ்ந்தது
பணிபுரியும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
சிறு நூலாகத் தொங்கிக்கொண்டிருந்த
உறவுக்கயிறு பட்டென அறுந்தது
அவனை மடியிலும், மார்பிலும் சுமந்த
தாய் எனும் தெய்வம்
புவி விஜயத்தை நிறைவு செய்து
கடமைகள் செய்து களைத்ததால்
ஓய்வெடுக்க கல்லறையை அடைந்தது
நேற்று வரை கண்ணெதிரே உலாவிய
ஒரேயொரு தெய்வமும்
இன்று அவன் கண்களைவிட்டு மறைந்தது.  


தாய்ப்பாசம்


அவள் ஓடிப்போனாள்...
அம்மாவும், அப்பாவும் கூடி
அழுதார்கள்
அப்போதும் கூட
'என்மகள்' என்று
தான் அம்மா சொன்னாள்.